Rescue of the bull : கால்வாய்க்குள் விழுந்த பசுவுக்கு மறுபிறப்பு: போராடி மீட்பு

bull lying in the drain :: மீட்பு பணிக்கு ஜேசிபி வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

Rescue of the bull: மனிதனுக்கு ஏதாவது பிரச்னை என்றால், உறவினர், நண்பர்களிடம் கூறலாம். ஆனால் வாய் பேச முடியாத‌ விலங்குகள் தாங்கள் கஷ்டப்படும்போது யாரிடமும் சொல்ல முடியாது. இதேபோல், பெரிய கால்வாய்க்குள் சிக்கிய‌ காளையை ஜேசிபி, தீயணைப்பு வாகனங்களில் உதவியுடன் கால்வாயில் இருந்து மேலே தூக்கிய சம்பவம் விஜயப்பூரா நகர எஸ்ஆர் காலனியில் நடந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி கால்வாய்க்குள் சிக்கிய காளையை மீட்கும் பணி நடந்தது.

விஜயபுரா நகரில் உள்ள இந்த பெரிய கால்வாயில் காளை ஒன்று விழுந்தது (bull fell into the big canal). கால்வாயில் சிக்கிய அந்த காளையால் நகர முடியாமல் போனது. இந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள்,பசு மீட்பு இளைஞர்கள், மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் சமூக சேவகர் பிரேமானந்த பிரதாராவின் மேற்பார்வையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மீட்பு பணிக்கு ஜேசிபி வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் (JCP and fire engine) பயன்படுத்தப்பட்டன. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் காளை மேலே தூக்கி நிறுத்தப்பட்டது. காளையின் வயிற்றில் பிரமாண்டமான கயிறு கட்டி இந்த மீட்பு பணி வெற்றிகரமாக நடைபெற்றது. காளை மேலே வந்ததும், தான் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

கால்நடைகளை இப்படி தெருவில் விடுவது தவறு. வாய் பேச முடியாத இந்த விலங்குகளுக்கு குழி, பள்ளம், மதகுகள், ஆபத்துகள் இருக்கும் இடம் தெரியாது. ஆனால் உணவு தேடும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. எனவே, இதுபோன்று கால்நடைகளை தெருவில் விடுபவர்கள் மீது நடவடிக்கை (Action against those who let cattle on the street) எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

விஜயபுரா மட்டுமின்றி கர்நாடகத்தின் பெரும் நகரங்களில் (major cities of Karnataka) காளை, பசு, எருமை உள்ளிட்டவைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் திரிய விட்டுவதனை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பல நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்கும் மட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கும் காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் இறக்கவும் நேரிடுகிறது.