Congress : பாஜக அரசு மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது: காங்கிரஸ்

பெங்களூரு: BJP government has betrayed the people of the state: பாஜக அரசு மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

பெங்களூரில் திங்கள்கிழமை ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (Randeep Singh Surjewala), எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் பேசியது: பாஜக அரசு மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. அப்படியென்றால் பாஜக உங்களுக்கு நெருக்கமானவர்களா என்பதனை மக்கள்தான் கூற வேண்டும்.

கடந்த தேர்தலின் போது மாநில மக்களுக்கு பாஜக 600க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது (BJP has made more than 600 promises). ஆனால் அடுத்த 8 மாதங்களில் ஆட்சி அவதி முடிய உள்ள நிலையில், 90 சத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியை கூட தொடங்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை மீறி, மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.

இந்த பாஜக‌ அரசு தனது நிர்வாகத்தின் போது வழங்கிய பங்களிப்புகள் மடங்களிலிருந்து, 30 சதம் கமிஷன், ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 40 சதம் கமிஷன் மற்றும் பாஜக ஊழியர்களிடமிருந்து 60 சதம் கமிஷன் ஆகியவைதான். மோடியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்த அரசாங்கம் ஆங்கிலத்தில் நான்கு ‘சி’க்களால் ஆனது. அவை சிதைந்து வரும் உள்கட்டமைப்பு (Crumbling infrastructure), முழுமையான கொள்கை முடக்கம், ஊழல், வகுப்புவாத பதற்றம். இது பாஜகவின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் பங்களிப்பாகும்.

கர்நாடகாவை நாட்டிலேயே ஊழல் நிறைந்த மாநிலமாக மாற்றிய பெருமை பாஜகவை சாரும். மாநில அரசியல் வரலாற்றில் மிகவும் பலவீனமானவர் என்றால் அது முதல்வர் பசவராஜ் பொம்மைதான். அவரது தலைமையில், தோல்வி, திறமையின்மை அதிகரித்துள்ளது. ஒருபுறம், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2013 முதல் 2018 வரை 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றியது. மீதமுள்ள திட்டங்களுக்கான பணிகளும் தொடங்கியுள்ளன. மறுபுறம், பாஜக அரசு அளித்த 600 வாக்குறுதிகளில் 91 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது (91 percent of promises remain unfulfilled).

நீங்கள் அறிவித்த கர்நாடக மாநில விவசாயிகளின் கடன் தள்ளுபடி (Farmers loan waiver) என்ன ஆனது?. விவசாயிகளுக்கு இரட்டை ஆதரவு விலையை அறிவித்தீர்கள். அதன் கதை என்னவானது?. திறன் மேம்பாடு மற்றும் வேலை உருவாக்கும் திட்டங்கள் எங்கே?. பெண்களுக்கு ஸ்மார்ட் போன் தருவதாக சொன்னீர்களே, அது என்னவானது?. பட்டியல் சாதி, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை எங்கே?. ஏழைகளுக்கான வீட்டுத் திட்டம் எங்கே?. உண்மை என்னவென்றால் மாநில மக்களிடம் பாஜக பொய்களை மட்டுமே கூறியுள்ளது.

இப்போது மட்டுமின்றி தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். காங்கிரஸ் தலைவர், சட்டப்பேரவை தலைவர், பிரச்சாரக் குழுத் தலைவர் மட்டுமின்றி கட்சியின் அனைத்துத் ஊழிய‌ர்களும் பாஜக அரசிடம் தினமும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் (One question should be asked to the BJP government every day). பாஜகவின் இரட்டை இஞ்சின் அரசு, இரண்டு வழிகளில் மாநிலத்தை ஆண்டு சீரழித்துள்ளது என்றார்.