Rescue of 10 feet python: கிருஷ்ணகிரி அருகே விளை நிலத்தில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு

கிருஷ்ணகிரி: Rescue of 10 feet python in arable land near Krishnagiri. கிருஷ்ணகிரி அருகே விளைநிலத்தில் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்திய 10 அடி மலைப்பாம்பை கிராம மக்கள் போராடி பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் இருந்த மலைப்பாம்புகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள போத்திநாயனப்பள்ளி கிராமத்தில் விளைநிலத்தில் மலைப்பாம்பு ஒன்று புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வந்தது. இந்த மலைப்பாம்பினால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போத்திநாயனப்பள்ளி கிராம மக்கள் விளைநிலத்திற்கு புகுந்து உலா வந்த மலைப்பாம்பினை பெக்லைன் இயந்திரம் மூலம் தேடினர். நீண்ட நேரத்தேடுதலுக்குப்பின் அந்த மலைப்பாம்பினை கிராம மக்கள் லாவகமாக பிடித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் வரத்தால், கிராம மக்களே சுமார் 10 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பினை மீண்டும் மகராஜா கடை அருகே உள்ள நாரலப்பள்ளி வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனர்.

கடந்த ஒரு வாரமாக விவசாயிகளை பயமுறுத்தி வந்த மலைப்பாம்பினை போரடி கிராம மக்கள் பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் உத்தனப்பள்ளி- சூளகிரி சாலையில் தேவசானப்பள்ளி அரசு பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கனிம வள அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.