North Chennai Thermal Power Station: வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: 210 MW power generation has been affected again due to repairs at North Chennai Thermal Power Station. வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையம் சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது.

இதையும் படிங்க: Ayurveda is the cure for actress Samantha: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வதே சிகிச்சை.. உடல்நிலையில் முன்னேற்றம்

அண்மையில் இந்நிலையத்திற்கு ஒரு நிலையகம் கடல் வழியாக வாங்கி எடுத்துவரப்பட்டது. அண்மைக்காலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்நிலையத்தை இயக்க நிலக்கரி வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மொத்த உற்பத்தி திறன் 1830 மெகாவாட்டாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Deepam festival : திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கொடியேற்றம்

1வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1வது நிலையில் உள்ள இரு அலகுகளிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக 630 மெ.வா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழுது நீக்கத்திற்குப்பின் உற்பத்தி தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.