Rain and flood damage in Bangalore : பெங்களூரில் மழை வெள்ள பாதிப்பு: இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : Chief Minister Basavaraj Bommai inspects today : பெங்களூரு மழை வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க‌ முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவுரை வழங்க‌ உள்ளார்.

பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இது குறித்து புதன்கிழமை அரசு இல்லமான கிருஷ்ணாவில் உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai) கூறியது: பெங்களூரு நகரின் பொம்மனஹள்ளி மற்றும் மகாதேவபுரா பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளன.இந்த இரண்டு மண்டலங்களிலும் கடுமையான பிரச்னைக்குரிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

சில முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மகாதேவபுரா மற்றும் பொம்மனஹள்ளி பகுதிகளில் மழையால் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓஆர்ஆர் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இப்பிரச்னைகள் அனைத்தையும் ஆய்வு செய்யும் போது, ​​மகாதேவபுரா மண்டலத்தில் 9 இடங்களிலும், பொம்மனஹள்ளியில் (Bommanahalli) 11 இடங்களிலும் பிரச்னை உள்ளது தெரியவந்துள்ளது. ஓஆர்ஆர் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

பெங்களூரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வடிகால்களின் தொடர்ச்சி இல்லை. பிரதான வாய்க்கால்கள் தொடர்ச்சி இல்லாமல் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைத் தூர்வாரவும், தண்ணீருக்கான இயற்கையான கால்வாய்களை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
பொம்மனஹள்ளியிலும் பணிகள் தொட‌ங்கி தேங்கும் நீரை அகற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 125 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வருவாய்த்துறை (Revenue Department ) அமைச்சர் தெரிவித்தார்.

ராஜ கால்வாய் அமைக்க ரூ.1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு (1500 crore rupees have been allocated ) டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் தொடங்க வேண்டும். கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மாதம் மற்றும் இந்த வாரத்தில் பெய்த கனமழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியுள்ளன. நிரம்பி வழியும் தண்ணீரும், மழைநீரும் இந்த பேரிடருக்கு காரணம். இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை. கடந்த முறை எலஹங்கா, மல்லேஸ்வரம் பகுதிகளில் இருந்த பிரச்னை சரி செய்யப்பட்டதால், இம்முறை பிரச்னை இல்லை. இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் கடந்த காலங்களில் நிரம்பியதால் பிரச்னை ஏற்பட்டது. வரும் நாட்களில் அனைத்து தடைகளையும் நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

வியாழக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தப்பட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த‌ இடத்திலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும். கே.ஆர்.புரத்தில், ரயில்வேயின் (Railways)அனுமதி பெற்று, டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தொட‌ங்கி உள்ளன. ஹொஸ்கரேஹள்ளியிலும் பணிகள் தொடங்கியுள்ளன. நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். பெல்லந்தூர் ஈகோஸ்பேஸ் மற்றும் ஆர்எம்இசட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவும்,தேங்கி உள்ள நீர் உடனடியாக அகற்றவும். ரெயின்போ பகுதியில் தேங்கி உள்ள நீரை அகற்றி மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அனைத்து மண்டலங்களின் இணை ஆணையர்களும் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பெஸ்காம் (Water and Drainage Board and BESCOM) நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையின் போது போக்குவரத்து போலீசார் சுறுசுறுப்பாக செயல்பட்டு போக்குவரத்தை சீராக இருக்க வேண்டும். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து, வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.