DK Sivakumar : எனது 40 ஆண்டுகால அனுபவத்தில் இது போன்று வெள்ள பாதிப்பை கண்டதில்லை: டி.கே.சிவகுமார்

ராம்நகர்: In my 40 years of experience I have never seen a flood like this: எனது 40 ஆண்டுகால அனுபவத்தில் ராம்நகர் மாவட்டத்தில் இது போன்று வெள்ள பாதிப்பை கண்டதில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

ராம்நகரில் வெள்ள பாதிப்பு (Flood damage) பகுதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ​​’எனது 40 ஆண்டுகால‌ அனுபவத்தில் இவ்வளவு கனமழையையையும், வெள்ளப் பாதிப்புகளையும் பார்த்ததில்லை. வட கர்நாடகாவின் சில பகுதிகளில் ஆறு நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து பெய்த மழையால் இங்குள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளத்தால் மக்களின் உடைகள் தவிர, உணவுப் பொருட்கள், வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன‌. வீடுகளில் இரண்டு அடி வரை சேறும், சகதியுமாக நிரம்பியுள்ளதால், மக்களின் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இப்பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் பேசி, சுகாதார நிலையங்கள் அமைக்க பரிந்துரைத்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டுத் தொழில் இயந்திரங்களிலும் (Silk Industry Machinery)ஒரு நபருக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகள் முழுத் தொழிற்சாலை அமைப்பையும் புதிதாகத் தொடங்க வேண்டும். இதுகுறித்து அரசு உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு சார்பில் தலா ரூ.10 ஆயிரம் உடனடியாக‌. இந்த தொகை சில நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு உணவுக்கு போதுமானதாக இருக்கும். அவர்களின் மறுவாழ்வு மற்றும் வாழ்க்கையை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட அமைச்சர்களின் வருகை தொடர்பான கேள்விக்கு, ‘மாவட்ட அமைச்சர்கள் மிகப் பெரியவர்கள். மாவட்ட பொறுப்பு அமைச்சரான (District In-charge Minister)பிறகு ராமநகர் மாவட்டத்தை சுத்தம் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்த பண்டிகை நாளிலும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் பகுதிகளை சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் இந்த பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் உடல்நிலையை பாதுகாக்கட்டும்’ என்றார்.

ஹூப்பள்ளி ஈத்கா மைதானத்தில் (Eidgah Grounds) விநாயகர் சதுர்த்தி கொண்டாட‌அனுமதி வழங்குவது குறித்து கேட்டபோது, ​​’நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். மாநிலத்தில் அமைதி காக்கப்பட வேண்டும். சீரழிந்து வரும் மாநிலத்தின் மானத்தைக் காப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்தியா ஒருமைப்பாட்டு பாத‌யாத்திரை குறித்த கேள்விக்கு, ‘மாநிலத்தின் குண்டலுபேட்டையில் இருந்து தொட‌ங்கி, ராய்ச்சூரை வரை ராகுல்காந்தி தலைமையில் பாதயாத்திரை நடைபெற உள்ளது (Padayatra will be held from Kundaluppet to Raichur under the leadership of Rahul Gandhi). இந்த பாதயாத்திரையில் மாநிலத்தின் அனைத்து தொகுதி மக்களும் ஒரு நாள் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளேன். இந்த நடைபயணத்தில் எங்கள் தொகுதி மக்கள் பங்கேற்பார்கள். இந்த பயணத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்றார்.