Dinesh Gundu Rao : ராகுல்காந்தியின் நடைபயணம் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்கும்: தினேஷ் குண்டுராவ்

காரைக்கால்: Rahul Gandhi’s padayatra will bring changes in India : ராகுல்காந்தியின் நடைபயணம் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்கும் என்று தமிழகம், புதுச்சேரி, கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

தமிழகம் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள சனீஸ்வரபகவான் கோயில் (Nagore Dargah, Velanganni and Lord Saneeswarabhagavan Temple at Karaikal, Puducherry)உள்ளிட்டவைகளுக்கு தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சென்ற தினேஷ்குண்டுராவ் வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ராகுல்காந்தி செப். 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை 150 நாள்கள் நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். சுமார் 3,500 கி.மீ தூரம் நடைப் பயணமாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம் பொருளாதார வீழ்ச்சி, கடன் சுமை (Under Prime Minister Narendra Modi’s regime, there is unemployment, economic decline, debt burden) ஆகியவற்றை குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி, பிரசாரம் செய்யப்படும். ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலுக்கு முந்திய ராகுல் காந்தியின் இந்த நடைபயண திட்டத்தால், மத்தியில் ஆட்சியில் மாற்றத்தை கொண்டு வரும் என்று அக்கட்சியினர் நம்புகிறனர். நடைபயணத்தின் போது மக்களிடம் பணவீக்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லவும், மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக பிரசாரம் செய்யவும் இந்த நடைபயணத்தை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது (The Congress party also plans to use the padayatra to campaign against the ruling BJP government). அயோத்திக்கு லால்கிருஷ்ண அத்வாணி நடைபயணம் மேற்கொண்டத்தால், அப்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வழிவகுத்தது. தற்போது கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி தலைமையில் நடைபயணம் மேற்கொள்வதால், மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.