Corona vaccination special camps in Tamil Nadu : தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் 13.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை: Corona vaccination for 13.77 lakh people in special camps in Tamil Nadu : தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 34 வது சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 9 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 34 வது சிறப்பு தடுப்பூசி முகாம்கள் (34th Special Vaccination Camps) 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம்ங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் பார்வை இட்டு, ஆய்வு மேற்கொண்டார் (Minister Ma. Subramaniam personally inspected and inspected). ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மற்ற மாவட்டங்களில் சம்பந்தப் பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேல்பட்ட 13,77,391 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் முதல் தவணையாக 1,26,907 பேரும், இரண்டாவது தவணையாக 3,49,324 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 9,01,160 பேர் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கும் மேல்பட்டவர்கள் 96.20 சதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 90.05 சதம் பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர் (90.05 percent people have also administered the second round of vaccination).

இந்தியாவில் கரோனா தொற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஜன. 16-ஆம் தேதி முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் 60 வயதிற்கும் மேல்பட்டவர்கள், முன்கள சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 12 வயதிற்கும் மேல்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது (At present everyone above 12 years of age is being vaccinated against Corona) குறிப்பிடத்தக்கது.