Puducherry No Corona Virus Affect: புதுச்சேரியில் உருமாறிய கொரோனா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி: மீண்டும் உலகத்தையே உருமாறிய கொரோனா (Puducherry No Corona Virus Affect) வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்துள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து பொதுமக்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று (ஜனவரி 2) பரிசோதனை நடத்தியதில் 5 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி கொரோனா தொற்று பூஜ்ஜியமாக இருந்தது. சீனாவில் தற்போது தொற்று உயர்ந்திருப்பதால் இந்தியாவில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக பொது இடங்களில் முக கவசம் அணிய புதுச்சேரி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என கொரோனா தொற்று இருந்தது. நேற்று 680 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.