Puducherry Assembly Session: புதுவை சட்டசபை 3ம் தேதி கூடுவதாக சபாநாயகர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கடந்த ஆண்டு (Puducherry Assembly Session) அக்டோபர் மாதம் கூடியது. அந்த கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி 3ம் தேதி கூடுகிறது. இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பேசும்போது, புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடுத்து வருகிறார். அவருடன் சேர்ந்து தலைமைச்செயலாளரும் மத்திய அரசு திட்டங்களை தடுத்து வருகிறார். இதனால் மத்திய அரசு திட்டங்களை புதுவையில் செயல்படுத்த விடாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம். இவ்வாறு ஏம்பலம் செல்வம் கூறியுள்ளார்.

புதுவையில் பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது அங்கு இரண்டு கட்சிகளும் முரண்பட்ட தகவலை தெரிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.