Prizes for 30 passengers in Chennai Metro: சென்னை மெட்ரோ இரயில் மாதாந்திர குலுக்கலில் 30 பயணிகளுக்கு பரிசுகள்

சென்னை: Prizes for 30 passengers in Chennai Metro Rail. சென்னை மெட்ரோ இரயில் மாதாந்திர குலுக்கலில் தேர்வுபெற்ற 30 பயணிகளுக்கு இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கினார்.

சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் மற்றும் மார்க் மெட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஒன்பதாவது மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்றது.

சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட செல்வராஜ் என்பவர் 119 முறை பயணம் செய்ததற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பரிசுகளை வழங்கினார்.

பரிசு பெற்ற செல்வராஜ் என்பவர் தெரிவித்ததாவது:

நான் மெட்ரோ இரயிலில் தான் அதிகம் பயணிக்கிறேன். இந்த இரயில் பயணத்தால் எனக்கு எவ்வித போக்குவரத்து இடைஞ்சலும் இல்லை. நான் சாதாரண இளநீர் வியாபாரி. கோயம்பேட்டில் தான் நான் தொழில் செய்து வருகிறேன். மெட்ரோ இரயில் கட்டுமான பணி தொடங்கிய நாளில் இருந்து நான் அதில் வேளை பார்த்தேன். தற்போது இளநீர் வியாபாரம் செய்து வருகிறேன். மெட்ரோ போக்குவரத்து எனக்கு சுலபமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), மார்க் மெட்ரோ இயக்குநர் முரளி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் – திட்ட விவரங்கள்:

  1. சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகள்.
  2. மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500/- மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகள், மற்றும் 3. மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையை வாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500/-க்கு டாப் அப் செய்த 10 பயணிகள்.