Private Job Fair: தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்

சென்னை: The Chief Minister issued an order to appoint at least one lakh jobs in the private employment camp. சென்னையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக இன்று (15.10.2022) சென்னை இராயப்பேட்டையில் உள்ள, புதுக்கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெற்ற அரங்குகளையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் செயல்பாடுகளை விளக்கும் காட்சிக்கூடத்தையும் முதல்வர் பார்வையிட்டார். தனியார் துறையில் பணிவாய்ப்பு பெற்ற ஒரு இலட்சமாவது வேலைநாடுநர் உள்ளிட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி விழா பேசினார்.

இம்முகாமில் 389 தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டனர். 21,623 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டதில் 26 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2.742 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர்.

மேலும் இம்முகாமில் முதல்கட்ட நேர்முகத்தேர்வில் 2477 நபர்கள் தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதிப் பெற்றனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 726 ஆகும்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, MEASI நிறுவனங்களின் தலைவர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் கொ. வீர ராகவ ராவ். மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.