HD Kumaraswamy : த‌ற்போது உள்ள காங்கிரஸ் போலியானது: எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: Present Congress is fake : தற்போது உள்ள காங்கிரஸ் போலியானது என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் திங்கள்கிழமை மஜத அலுவலகமான ஜேபி பவனில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து (hoisting the national flag) அவர் பேசியது: ஒரு புறம் சுதந்திரத்திற்காக போராடிய நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்படுகிறது. மற்றொரு புறம் நாடு இரண்டாக உடைய நேருதான் காரணமென்று கூறப்படுகிறது. மகாத்மா காந்தியை கொன்றவர்கள்தான் நாடு உடைய காரணமானவர்கள். அப்போது நாடு இரண்டாக உடைய பாஜகவின் முன்னோடிகள்தான் காரணம் என்பதை ஏனோ மறைக்கப்படுகிறது. ஆனால் தேவையில்லாமல் நேரு மீது குற்றம் சாட்டப்படுகிறது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையடுத்து பாஜக வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி பேரணி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தேசியக் கட்சிகள் மக்களை முட்டாள்களாக பார்க்கின்றன. அன்று சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சியினர் வேறு. தற்போது உள்ள காங்கிரஸ் போலியானது (Present Congress is fake). அன்று சுதந்திரத்திற்காக பலர் உயிர் தியாகம் செய்தனர். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு அதைப் பற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஜவகர்லால் நேரு விவகாரத்தில் பாஜக நடந்து கொள்ளும் முறை, அனைவரும் தலை குனிய வேண்டியதாகி உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

நேரு குடும்பம் சுதந்திரத்திற்காக எப்படி போராடியது. சுதந்திரத்திற்காக அவரின் பங்களிப்பு என்ன என்பதனை அனைவரும் அறிந்துள்ளனர். கர்நாடக அரசின் சுதந்திர விளம்பரத்தில் நேருவை படம் இடம்பெறாமல் புறக்கணித்துள்ளது (ignored Nehru) வேதனை அளிக்கிறது. சவார்கர் படத்தை எடுத்தார் என்ற காரணத்திற்காகவும், திப்பு சுல்தான் படத்தை வைத்தார் என்ற காரணத்திற்காக‌ இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதான் 75 வது சுதந்திரம் கொண்டாடும் முறையா என்பதனை விளக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மஜத மாநிலத் தலைவர் சி.எம்.இப்ராஹிம், சட்டமேலவைத் தலைவர் டி.ஏ.சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.