Araga jnanendra jeep accident : கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது

shivamogga : சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி சந்திப்பில் எதிரே வந்த கார், பாதுகாப்பு ஜீப் மீது மோதியது. அதிஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

ஷிமோகா: araga jnanendra jeep accident: கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் பாதுகாப்பிற்கு சென்ற‌ வாகனம் விபத்துக்குள்ளானது. ஷிமோகா மாவட்டம் பத்ராவதி சந்திப்பில், எதிரே வந்த கார் பாதுகாப்பு ஜீப் மீது மோதியது. இதில் ஜீப்பின் முன் பகுதி சேதமானது. உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தும்கூருவின் வழியாக‌ தீர்த்தஹள்ளிக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருப்பதாக‌ கூறப்படுகிறது. இந்நிலையில், எதிரே வந்த கார் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நோக்கிச் சென்ற கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. KA14G1081 இலக்கம் கொண்ட ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் காரணமாக நீல நிற கான்வாய் ஜீப்பின் முன்பகுதி ஓரளவு நசுங்கியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக அரக ஞானேந்திரா தும்கூரு ஜூனியர் அரசு கல்லூரி (Tumkur Junior Govt college) மைதானத்தில் நடந்த சுதந்திரக் கொண்டாடத்தில் கலந்து கொண்டார். அங்கு தேசியக் கொடியை ஏற்றிய அரக ஞானேந்திரா, இன்னும் 25 ஆண்டுகளில் நாட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அண்மைக்காலமாக‌ இந்தியா உலக நாடுகளில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்திலும் (Information Technology) முன்னணியில் உள்ளது. இந்தியா சர்வதேச அளவில் ராணுவத்தில் 4 வது பெரிய ராணுவமாக திகழ்கிறது. நமது ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பதில் நமது ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். பல நாடுகள் நமது நாட்டின் இளைஞர்களை தவறாக பாதைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளன. அது போன்ற தீய சக்திகளை அடக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை கலாசாரம் சிறந்து விளங்கும் இந்திய நாடு. இதனை யாரும் மறக்காமல் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.