Postponement of RSS rally: தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

சென்னை: Postponement of RSS rally across Tamil Nadu. தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதனையடுத்து காவல் துறை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 6 ம் தேதியன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 3 இடகளில் மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நேற்று அனுமதி அளித்தது. ஆனால், சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.

நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.