Chief Minister Basavaraj Bommai : கல்யாண கர்நாடகப்பகுதி வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க திட்டம்: முதல்வர் பசவராஜ்பொம்மை

கலபுர்கி : Plan to allocate Rs 5 thousand crores for the development of Kalyana Karnataka region: கல்யாண கர்நாடகப்பகுதி வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பசவராஜ்பொம்மை தெரிவித்தார்.

ஹைதராபாத்தை தலைநகராக கொண்டு இன்றைய கர்நாடகத்தின் வடகிழக்கு, தெலங்கானா, ஆந்திரத்தின் வடப்பகுதி, ஒடிசாவின் தென் பகுதியை 1724-ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வந்த ஆசப்ஜா சாம்ராஜ்ஜியம் (Asapja Empire), 1947-இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம்பெற்றபோது இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து, நிஜாம் துருப்புகளுடன் சண்டையிட்டு 1948-ஆம் ஆண்டு செப்.17-ஆம் தேதி ஹைதராபாத் சாம்ராஜ்ஜியப் பகுதிகளை இந்தியாவுடன் இணைந்துக்கொண்டது அன்றைய இந்திய படைகள். இந்த சாம்ராஜ்ஜிய‌த்தில் அங்கம் வகித்த, கன்னடம் பேசும் மக்கள் வசித்து வந்த பீதர், கலபுர்கி, ராய்ச்சூரு, கொப்பள், பெல்லாரி, யாதகிரி,விஜயநகரா ஆகிய 7 மாவட்டங்கள், மொழிவழிமாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1956-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி அன்றைய மைசூரு மாநிலத்தில்(1973-இல் கர்நாடகம் என்று மாறியது) சேர்க்கப்பட்டன. ஹைதராபாத்-கர்நாடகப்பகுதி என்று அழைக்கப்பட்டு வந்த, இம்மாவட்டங்கள் 2019-இல் கல்யாண-கர்நாடகப்பகுதி என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஹைதராபாத் சாம்ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைந்து 75 ஆண்டுகளாவதை (75 years of Hyderabad Empire joining India) முன்னிட்டு, கர்நாடக அரசு சார்பில் கலபுர்கியில் சனிக்கிழமை நடந்தவிழாவில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, கூடியிருந்த மக்களிடையே முதல்வர் பசவராஜ்பொம்மை பேசியது: கல்யாண-கர்நாடகப்பகுதிக்கு அரசியலமைப்புச்சட்டம் 371(ஜே )-இல் திருத்தம்செய்யப்பட்டு, சிறப்புத்தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் மேம்பாட்டுக்கு இதுமட்டும் போதாது. அதிகளவில் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

கடந்தநிதிநிலை அறிக்கையில் கல்யாண-கர்நாடகப்பகுதிக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கானநிதிநிலை அறிக்கையில், கல்யாண-கர்நாடகப்பகுதியின் ஒருங்கிணைந்தவளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இப்பகுதியின் கல்விவளர்ச்சிக்கு முக்கியத்துவம் (Emphasis on educational development) அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 2100 வகுப்பறைகள் கட்டப்பட்டுவருகின்றன. மேலும் 2500 அங்கன்வாடி மையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்யாண-கர்நாடகப்பகுதி மேம்பாட்டுக்கு கட்சிபேதம் மறந்து மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் உழைக்க வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக, இந்தியாவின் முதல் துணை பிரதம‌ரும், உள்துறை அமைச்சருமான சர்தார்வல்லபாய்படேலின் சிலைக்கு மாலை (Garland for statue of Sardar Vallabhbhai Patel) அணிவித்தார். பின்னர், பல்வேறு படைகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பசவராஜ்பொம்மை ஏற்றுக்கொண்டார்.