Petrol Price: சென்னையில் பெட்ரோல், டீசல் 24வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை

petrol price
சென்னையில் பெட்ரோல், டீசல் 24வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை

Petrol Price: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், கடந்த 23 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 24வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Waste Management: மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்