Child labour: பாகிஸ்தானில் கொத்தடிமை கூலிகளாக 7 லட்சம் குழந்தைகள்

child-labour
பாகிஸ்தானில் கொத்தடிமை கூலிகளாக 7 லட்சம் குழந்தைகள்

Child labour: உலக நாடுகளில் இந்தியா உள்பட கொத்தடிமை தொழிலாளர்களாக மனிதர்களை வேலையில் அமர்த்துவதற்கு தடை உள்ளது. அதற்கு எதிரான கடுமையான சட்டமும் அமலில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஹாரி நல கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டு உள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் 17 லட்சம் பேர் கொத்தடிமை கூலிகளாக உள்ளனர். அவர்களில் 7 லட்சம் பேர் குழந்தைகள் என்று தெரிவித்து உள்ளது. அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நிலச்சுவான்தாரர்கள், மனிதநேயமற்ற, முறையற்ற வகையிலான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வதற்கு சிக்கலான இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் என அதுபற்றிய செய்தியை டான் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

சிந்த் மாகாணத்தில் 64 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்யும் அவல நிலை காணப்படுகிறது.

இதையும் படிங்க: Waste Management: மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்