DGP C. Sailendrababu : புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: டிஜிபி சி.சைலேந்திரபாபு

சென்னை: People who come to file complaints should be treated with kindness: காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் (City Police Commissioners) மண்டல ஐஜிக்கள், சரக டிஜிக்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அண்மையில் அனுப்பி இருந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எந்த ஒரு தொழிலும் வெற்றி பெறுவதற்கு சரியான அணுகு முறைகளை கொண்ட அதிகாரிகளும், அப்படிப்பட்ட தலைமையைக் கொண்ட நிறுவனங்களும் தங்களது இலக்கை அடைவதோடு, தாங்கள் விரும்பும் சமூகத்தை உருவாக்க முடிகிறது.

தமிழக காவல்துறையில் சில அதிகாரிகள் (Some officers in the police force) எதிர்மறையான சிந்தனையுடன் செயல்படுகின்றனர். காவல் நிலையத்திற்கு வந்து புகார்தாரர்களிடம் சில நேரங்களில் உயர் அதிகாரிகளை அணுகி இருந்தால், அதை அவர்களிடம் சுட்டிக் காட்டி பேசக் கூடாது. புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், அவர்கள் நியாத்தை பெற நீதி மன்றம் செல்வார்கள்.

புகார்தாரரை கேலி செய்வதும், துன்புறுத்துவதும், காவல்துறையின் நன்மதிப்பை சமூகத்தில் குறைத்துவிடும் (It will reduce the reputation of the police in the society). காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். நேர்மையான எண்ணங்களுக்கும், செயல்பாடுகளும், நம்மை சமூகத்தில் சிறந்த மனிதனாக சிறந்த அதிகாரியாக கட்டமைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

காவல் நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்களிடம், அங்குள்ள காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் மரியாதையோடும், கௌரவத்தோடும் நடந்து கொள்வதில்லை (Police officers and guards do not behave with respect and dignity) என்று புகார்கள் வந்ததையடுத்து, டிஜிபி சி.சைலேந்திர பாபுடிஜிபி சி.சைலேந்திர பாபு இது தொடர்பான சுற்றறிக்கையை காவல் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.