Palamedu Jallikattu:மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூர்த்தக்கால்

மதுரை: Palamedu started with planting puja in front of Vadivasal in honor of Jallikattu. பாலமேடு ஐல்லிக்கட்டுப்போட்டியை முன்னிட்டு வாடிவாசல் முன் முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் துவங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். அறுவடைக் காலத்தைக் கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக நடைபெறும் பாரம்பரிய காளைகளை அடக்கும் நிகழ்ச்சி இது.

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இளைஞர்கள் தங்கள் துணிச்சலையும் வலிமையையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாக இது தோன்றியதாக நம்பப்படுகிறது. மேலும் நிகழ்வில் பயன்படுத்தப்படும் காளைகளின் பூர்வீக இனங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாகவும் இது கருதப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் விலங்குகளை வதைத்தது. ஆனால், பின்னர் தமிழக அரசால் தடை நீக்கப்பட்டு, ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாலமேடு பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு மஞ்சமலை ஆற்றில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்குவதற்கு, வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேருராட்சி மன்றத் தலைவர், சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் ராமராஜ, மன்ற உறுப்பினர்கள் , செயற் பொறியாளர், சுரேஷ்குமார் இளநிலை பொறியாளர் , கருப்பையா செயல் அலுவலர் பா.தேவி மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், மதுரை அருகே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில், 17 லட்சத்து 61 ஆயிரத்திற்காக டெண்டர் விடப்பட்டு, விழா மேடை |தடுப்பு வேலிகள் , கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்களுக்கான தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் (ஜனவரி 15)அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஜல்லிகட்டு போட்டி தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவை இடையே மாவட்ட நிர்வாகம் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவுக்கு வராத நிலையில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடைபெறுவதற்காக 17 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு தடுப்பு வேலைகள், குடிநீர், விழாமேடை மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.

தென்காள் பாசன விவசாயிகள் மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இல்லாமல் மதுரை மாநகராட்சி ஏற்று நடத்துவதால், கால் கோல் விழா ஏதும் நடத்தப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.