Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (10.01.2023)

சுபகிருது ஆண்டு (Today Rasi Palan) மார்கழி மாதம் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11.11 மணி வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. காலை 8.29 மணி வரை ஆயில்யம். பின்னர் மகம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். தொழிலுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே சந்திப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனமாக ஈடுபடவேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

ரிஷபம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். சொந்த பந்தங்களில் நிலவிய பகையை விலக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். கடுமையான வேலையை முடித்து அரசுப் பணியாளர்கள் நிம்மதி அடைவீர்கள். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்: ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். தொழிலுக்குப் போட்டி விலகும். இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களின் செல்வாக்கு இருமடங்கா உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து தொழிலுக்குத் தேவையான பண உதவி பெறுவீர்கள்.

கடகம்: விருந்து நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவழிப்பீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். குடும்பம் இணைவதற்கு பாடுபடுவீர்கள். தாய் மாமன் வழியில் நன்மை கிடைக்கும். காதலியின் கனிவான பேச்சால் உற்சாகமடைவீர்கள்.

சிம்மம்: ஊர் மக்களுக்கு நன்மை செய்வீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்ற மன வருத்தம் அடைவீர்கள். வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். நம்பியவர்கள் நல்ல நேரத்தில் கை விரிப்பார்கள்.

கன்னி: இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசி செய்யும் உதவியால் கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள். எல்ஐசி துறையில் உள்ளவர்கள் புதிய பாலிசி பிடிப்பீர்கள். வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். அரசாங்க உதவியை தாராளமாக பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

துலாம்: கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். இதயத்தில் ஏற்பட்ட வலிக்கு பரிசோதனை செய்து கொள்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றத்தால் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

விருச்சிகம்: டீக்கடையில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் செய்யாதீர்கள். அரசு வேலையில் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். அக்கறையோடு வேலை பார்த்தாலும் கெட்ட பெயரைத் தான் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

தனுசு: கடந்த காலங்களில் ஏமாற்றத்தைச் சந்தித்த நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இக்கட்டான நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் செய்வீர்கள். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். சந்திராஷ்டம நாள். என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்: நீங்கள் உதவி செய்தவர்களிடம் உதவி கேட்டு ஏமாந்து போக நேரிடும். விடா முயற்சியால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்மறையான பலனால் வேதனை அடைவீர்கள். குடும்ப விவகாரத்தால் மனக்குழப்பம் அடைவீர்கள். அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதை அறவே நிறுத்துங்கள்.

கும்பம்: குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். தொழில்துறையில் இருந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசுத்துறை வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருப்பீர்கள். செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள். கட்டுமானத் தொழில் சிறப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள்.