Tamil Nadu Pollution Control Board : தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: Only green crackers allowed for Diwali: தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) வழிகாட்டுதலை வழங்கி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாடுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: தமிழகத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுகாதார பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Tamil Nadu Pollution Control Board) கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. பட்டாசு வெடிப்பது தற்காலிக அல்லது நிரந்தர காது கேளாமை மற்றும் கடுமையான சுவாச நோய்களை ஏற்படுத்தும். பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு காற்று, நிலம் மற்றும் நீர் ஆகியவற்றை பாதிக்கும் மற்றும் அதிக டெசிபல் சத்தம் விலங்குகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று வாரியம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, பண்டிகையை கொண்டாட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத‌‘பசுமை பட்டாசுகள்’ மட்டுமே பயன்படுத்த உத்திரவிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் அக்டோபர் 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (In a judgment delivered by the Supreme Court on October 2, 2018), அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த‌ உத்தரவை மேற்கோள் காட்டி, “பசுமை பட்டாசுகளை” விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், “குறைந்த மாசு, குறைந்த மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே” பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் 7 மணி மற்றும் இரவு 7 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று மட்டும் இரவு 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (Only on Diwali, crackers are permitted till 8 pm.)மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதிப் பகுதிகளிலும், குடிசைகள் மற்றும் தீ விபத்து ஏற்படும் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளான கட்டிடங்களுக்கு அருகாமையிலும் பட்டாசு வெடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. டெசிபல் குறைந்த பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும்.

வாரியம் அனைத்து மாநகராட்சிகளிலும் பண்டிகை மற்றும் அதற்குப் பிறகு உள்ள நாட்களில் காற்று மாசுபாட்டை கண்காணிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை (Strict action against those bursting firecrackers beyond the specified time) எடுக்கப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளி மற்றும் அதற்குப் பிறகு உள்ள நாட்களில் காற்று மாசுபாட்டை கண்காணிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் மக்கள் கூடி பட்டாசு வெடிக்க பொதுநலச் சங்கங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என டிஎன்பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து காற்று மாசு அடைந்து வருவதால், வாரியத்தின் உத்தரவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.