Diwali 16,888 buses : தீபாவளியையொட்டி 16,888 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை : 16,888 buses to run on Diwali: Minister Sivashankar : தீபாவளி பண்டிகையை மக்கள் சொந்த யொட்டி , ஊர்களுக் குச் செல்ல வசதியாக 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவ ரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகைக் கென பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய‌து: தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் (Coming from 21st to 23rd) வழக்கமான பேருந்து சேவைகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன . சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உள்பட மாநிலம் முழுவதும் 3 நாள்களுக்கு 6 ஆயிரத்து 300 பேருந்துகளும், இவற்றுடன் 10 ஆயிரத்து 588 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 3 நாள்களுக்கு 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளியையொட்டி அக். 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, 13,152 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் பயணிக்க சென்னை கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்களும் , தாம்பரம் சானடோரியத்தில் ஒரு மையமும் என 11 மையங்கள் வரும் 21 ஆம் தேதி முதல் 23 – ஆம் தேதி வரை இயக்கப்படும். முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc app மற்றும் www.tnstc.in இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளியையொட்டி, இயக்கப்படும் பேருந்து அனைத்து இருக்கைகளும் பூர்த்தி ஆகிவிட்டால் அவை கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, மற்றும் புறவளைவுச் சாலை வ‌ழியாக வண்டலூர் அடையும். அங்கிருந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்துக்குச் செல்லும். தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து மேற்கொள்ள விரும்புவோர், ஊரம்பாக்கம் சென்று பேருந்து ஏறிக் கொள்ல‌லாம் . கார் உள்ளிட்ட‌ இதரவாகனங்களில் செல்வோ , போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாற்று வழிகளில் பயணத் மேற்கொள்ள திட்டமிடலாம். அதன்படி தாம்பரம் பருங்களத்தூர் வழியாக செல்வதை த‌விர்த்து, திருப்போரூர், செங்கல்ட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்ல்பட்டு வழியாகச் செல்லலாம் (Go via Sriperumbudur- Chengalpattu) என்றார்.

மேலும் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை (Control room to complain) அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்தும், புகார் தெரிவிக்கவும் 94450 14450 . 94450 14436 ஆகிய தொலை பேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் , தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 1800 4256151, 044 – 24749002. 26280445. 26281611 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்றார்