One Day Workshop on Income Tax: சென்னையில் வருமானவரி குறித்த ஒரு நாள் பயிலரங்கு

சென்னை: One Day Workshop on Income Tax. சென்னையில் வருமானவரி குறித்த ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சென்னை மண்டல வருமானவரி ஆணையமும் இணைந்து ஒருநாள் “வருமானவரி பிடித்தம் மற்றும் வரவு” பற்றிய (பயிலரங்கு) ஒன்றை நடத்தியது.

இந்த பயிலரங்கில் எம். அர்ஜுன் மானிக், வருமானவரி இணை ஆணையர் முதன்மை உரையாற்றினார். ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சிப்நாத் தேவ் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார்.

வருமானவரி ஆணையர் டி.வி.சுப்பாராவ் நோக்கவுரையாற்ற வருமானவரி தாக்கல் செய்வதன் அவசியத்தையும், அதன் பலன்களையும் தாக்கல் செய்யாத்தால் வரும் சிக்கல்களையும் உதாரணத்துடன் நேர்த்தியாக விளக்கினார்.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களின் மத்திய அரசின் அலுவலகங்களில் பணியாற்றும் 43 பணியாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பயிலரங்கில் வருமானவரி அலுவலர் ராஜாராமன் மற்றும் வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் முனைவர் ஆடிட்டர் அபிஷேக் முரளி ஆகியோர் வருமானவரி தாக்கல் பற்றிய நுட்பமான, மிக நுணுக்கமான விஷயங்களை விளக்கினார்.

அஞ்சலக குறை தீர்வு முகாம்:
கடந்த 11.08.2022 அன்று வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் சென்னையில் உள்ள அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற இருந்தது. , 29.09.2022 (வியாழன்) அன்று காலை 10.30 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.