Siddaramaiah support: வட கர்நாடகத்தில் நடைபெறும் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை வேண்டும் பிரச்சாரத்திற்கு சித்தராமையா ஆதரவு

அண்மையில் கர்நாடக மாநிலம் சிரூரு சுங்கச்சாவடி அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்

Image credit: Twitter.

பெங்களூரு: Need a hospital for emergency treatment: வட கர்நாடகத்தில் நடைபெறும் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை வேண்டும் பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் (Twitter) பதிவு செய்யப்பட்டுள்ளதாவது: வட‌கன்னடாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை கட்ட வேண்டும் என சுட்டுரையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்சாரத்திற்கு அனைவரும் ஆதரவை சுட்டுரையில் பதிவு செய்ய‌ வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் கர்நாடக மாநிலம் சிரூரு சுங்கச்சாவடி (Siruru Tollgate) அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வட‌ கன்னடாவில் (Emergency Hospital In Uttara Kannada) அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கர்நாடகாவின் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தும் வசதிகளுடன் கூடிய அவசர மருத்துவமனை இல்லாதது குறித்து வட‌ கன்னட மக்கள் (People of North Kannada) பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகின்றனர். இப்போது, ​​இரண்டாவது முறையாக, இந்த குரல் மீண்டும் உரக்கச் செய்ய தேசிய அளவில் சுட்டுரையில் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்திற்கு தனது ஆதரவு உள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா (Siddaramaiah) சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். இது இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் வலு சேர்த்துள்ளது.