Nityanandhar Rudraksha Chariot: திருவண்ணாமலையில் கோடி ருத்ராட்சம் மூலம் உருவாகி வரும் நித்தியானந்தர் தேர்

திருவண்ணாமலை: Nithyanandhar Chariot is being made with crores of Rudraksha in Tiruvannamalai. திருவண்ணாமலை கைலாசாவின் ஆன்மீக தூதரகத்தில் பிரம்மாண்டமான ருத்ராட்ச தேர் தயாராகி வருகிறது.

நித்தியானந்தர் என்றாலே பரபரப்பு தான். தற்போது அவர் எங்கு உள்ளார் என்ன செய்கிறார் என்று தெரியாத நிலையில் யூடியூப் மூலம் அடிக்கடி தனது பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

பெங்களூரு இடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சுவாமி நித்தியானந்தா தனித்தீவு ஒன்றை வாங்கி கைலாச எனும் புதிய நாட்டை உருவாக்கி அதை இந்துக்களின் புனித பூமியாக அறிவித்திருந்தார் இதை அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளது.

தற்போது திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தர் ஆசிரமம் கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது.

நித்தியானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் இருந்த அவரது ஆசிரமம் கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாட்களில் ஐம்பதாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு பிடதியில் இருந்த தேர்கள், திருவண்ணாமலை கைலாசா ஆன்மீக தூதரக தூதரகத்திற்கு கனரா வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது.

அந்த தேர்களில் இரண்டு தேர்கல் திருவாரூர் ஆழித்தேர் போன்ற வடிவமைப்பிலும், மற்றொரு தேர் திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் போன்றும் காட்சியளிக்கிறது.

இந்த தேரில் மேற்கூரை முழுவதும் கோடி ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்டு தயாராகி வருகிறது. பரமசிவன், பார்வதி தேவி மற்றும் நித்தியானந்தர் சிலைகளுடன் இந்த தேர்கள் மகா சிவராத்திரி தினத்தன்று பக்தர்களுக்கு காட்சியளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று தேர்களின் உயரம் சராசரியாக 36 அடி உயரத்தில் உள்ளது தேரின் அடிபீடம் சுமார் 12 அடி உயரம் உள்ளது. மேலும் ஆன்மீக தூதரகத்தில் இந்துக்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

மேலும் நித்யானந்தரின் அவதார திருநாளில் அனுமதி பெற்று கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரமம் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.