Celebration of National Unity Day in BIS Office: இந்திய தர நிர்ணய அமைவனத்தில் இன்று தேசிய ஒற்றுமை தின விழா

சென்னை: Celebration of National Unity Day in Bureau of Indian Standards Office சென்னையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தில் இன்று தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாடப்பட்டது.

மத்திய நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் இன்று (31.10.2022) கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய நாட்டின் முதலாவது துணைப்பிரதமரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை குறிக்கும் வகையில், தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இந்திய தரநிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மினி வாக்கத்தான் எனும் ஒற்றுமைக்கான நடைபயணத்தில் இந்த அமைவன ஊழியர்கள் பங்கேற்றனர். இது தவிர கட்டுரை மற்றும் முழக்கம் எழுதும் போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு தென்மண்டல `ஆய்வக அதிகாரி திருமதி மீனாட்சி கணேசன் மற்றும் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒற்றுமை உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் (சந்தை மற்றும் நுகர்வோர் நலன் திரு எச் அஜய் கன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.