Nalini expressed regret: குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது: நளினி

சென்னை: Nalini said that it is sad that the Former prime minister died in the blast. குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான நளினி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான நளினி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நளினி, தூக்கு தண்டனை கிடைத்தபோது வாழ்க்கையே வெறுத்தேன். எப்போதும் அழுதுகொண்டே இருப்பேன். கட்டாயம் படிக்க வேண்டும் என்று கூறியதால் 6 ஆண்டுகளாக கல்வி கற்றதாகவும், எம்.சி.ஏவில் ஒரு சப்ஜெக்டில் 198 மதிப்பெண் எடுத்ததாகவும், பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் போன்ற படிப்புகளை படித்ததாகவும் நளினி தெரிவித்தார்.

மேலும் விடுதலை தொடர்பான வழக்கில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தோம். விடுதலைக்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கும் அன்பை பொழிந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. 7 பேர் விடுதலைக்காக போராடியவர்களை சந்தித்து நன்றி சொல்ல ஆசையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக முதல்வர் சந்திப்பது அவருக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால் அவரை சந்திக்க தயக்கமாக உள்ளது. சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.