Murugha Seer in Jail : முருகா மடத்தின் சிவமூர்த்தி சுவாமிகள் சிறையில் அடைப்பு

போக்சோ வழக்கும், அட்ராசிட்டி வழக்கும் மிகவும் தீவிரமான வழக்குகள் என்பதால், ஜாமீன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்

சித்ரதுர்கா: Murugha Seer in Jail : மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பலாத்காரம் மற்றும் சாதிய துஷ்பிரயோகம் போன்ற வழக்குகளை எதிர்கொண்ட சித்ரதுர்கா முருகா மடத்தின் சிவமூர்த்தி சுவாமிகள் சிறையில் அடைக்கப்பட்டார். வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் மடத்துக்கு வந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

ஆகஸ்ட் 26 அன்று, மைசூரில் உள்ள நசர்பாத் காவல் நிலையத்தில்(Nazarbad Police Station) முருகா மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு மைனர் பெண்கள் (சித்ரதுர்கா) மைசூரு ஒடநாடி அமைப்பின் உறுப்பினர்கள் முன்பு முருக மடத்தின் மடாதிபதி தங்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர். சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒடநாடி அமைப்பினர் ஆதரவுடன் மைனர் சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிவமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடத்தின் செயலாளர் பரமசிவய்யா, வழக்கறிஞர் கங்காதரையா ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். முருகா மடத்தில் தங்கியிருந்த சிவமூர்த்தி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு கைது (Arrested on Thursday night) செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். முருகா சுவாமிகள் தரப்பு வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிபதி கோமளா நிராகரித்தார். வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டார். இதனையடுத்து சுவாமிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இதனால் அதிகாலை 3 மணிக்கு சித்ரதுர்கா மாவட்ட சிறைக்கு சிவமூர்த்தி சுவாமிகள் அனுப்பி வைக்கப்பட்டார். மறுபுறம், வழக்கின் 2 வது குற்றவாளியான‌ பெண் வார்டன் காவல்துறையின் காவலில் உள்ளார், தற்போது மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன..?

*வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் போலீசார் மடத்திற்குள் நுழைந்தனர்

*சித்ரதுர்கா காவல் ஆய்வாளர் பாலச்சந்திர நாயகே, மொளகால்முரு காவல் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் மடாதிபதி கைது.

  • இரவு 10.30 மணிக்கு, போலீசார் சிவமூர்த்தி சுவாமிகளை கைது செய்தனர்
  • இரவு 11 மணிக்கு செல்லக்கெரே டி.எஸ்.பி அலுவகத்திற்கு ஆஜர் படுத்தப்பட்டார்.
  • இரவு 11 மணி முதல் 12.30 மணி வரை சிவமூர்த்தி சுவாமிகளிடம் முதற்கட்ட விசாரணை
  • அதிகாலை 12.40 மணிக்கு சிவமூர்த்தி சுவாமிகளுக்கு மருத்துவ பரிசோதனை.
  • அதிகாலை 2.30 மணிக்கு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
  • அதிகாலை 3 மணி அளவில் முருகா மடாதிபதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

6 நாட்களுக்குப் பிறகு கைது: பொதுவாக, போக்ஸோ வழக்குப் பதிவு (POCSO case is registered) செய்யப்பட்டால், காவல்துறை பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை எடுத்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்யப்படுவது வழக்கம். ஆனால் முருகா மடாதிபதி விஷயத்தில் அப்படி இல்லை. சிவமூர்த்தி சுவாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்தும், அவரை கைது செய்யபடவில்லை என்பது ஒருபுறம் இருக்க, குறைந்தபட்சம் அவரிடம் விசாரிக்கவும் இல்லை. மடாதிபதிக்கு எதிராக புகார் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் இருந்து 164 வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் பெறப்பட்டன. மடாதிபதி மீது வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிறுமி நீதிமன்றத்தில் வாக்குமூலமும் தாக்கல் செய்தார். இவ்வளவிற்கு பிறகும் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து மவுனமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து முருகா மடாதிபதிக்கு ஆதரவாகவும், எதிர்ப்புகள் தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெற்றன.

மடாதிபதிக்கு முன் ஜாமீன்..? : வழக்கு தொடர்பாக சுவாமிகள் கைது செய்வதற்கு முன், சித்ராதுர்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி (Seeking anticipatory bail in Chitradurga District Sessions Court) வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம், ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. அதனால் இன்று ஜாமீன் கிடைத்ததால் அவர் கைது செய்யப்பட மாட்டார் என்று அவரது ஆதாரவாளர்கள் கருதி இருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவே சுவாமிகள் கைது செய்யப்பட்டதால், முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்படுகிறது. மடாதிபதி சார்பில் தற்போது புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், போக்சோ வழக்கும், அட்ராசிட்டி வழக்கும் மிகவும் தீவிரமான வழக்குகள் என்பதால், ஜாமீன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகா மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிகளுக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளதையடுத்து, வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.