MP Sumalatha Ambarish : மழை சேதம் குறித்து சுமலதா அலட்சியம்: பொதுமக்கள் ஆத்திரத்தை அடுத்து விழித்துக் கொண்ட‌ எம்.பி

Mandya : சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான அதிருப்தியை அடுத்து இன்று மாலை 3 மணிக்கு மாண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சுமலதா ஆலோசனை நடத்தினார்.

மண்டியா: MP Sumalatha Ambarish : அம்பரீஷின் மறைவிற்கு பிறகு கடந்த முறை நடைபெற்ற மக்களவை தேர்தலில், நடிகை சுமலதா, பிடிவாதமாக சுயேச்சையாக போட்டி இட்டார். தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மண்டியா தொகுதி மக்களிடம் மடிபிச்சைக் கேட்டார். அவரை எதிர்த்து நின்ற முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும், அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதாவுக்கும் இடையேயான தேர்தல் போட்டி, போர் போல காட்சி அளிதது. இங்கு நடைபெற்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக இருந்ததால், மாண்டியா மாவட்ட மக்களவைத் தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த மாநிலமே உற்று நோக்கியது.

மக்களவைத் தேர்தலில் மஜத‌ தலைவரின் அட்டகாசமான அறிக்கைகளாலும், அம்பரீஷ் மற்றும் நடிகர்கள் தர்ஷன், யஷ் (Ambareesh and actors Darshan, Yash) ஆகியோரின் மீதான அபிமானத்தாலும் சுமலதா பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இதற்கு பிறகு மண்டியா மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் சுமலதா பலமுறை தோல்வி அடைந்து வருகிறார். மண்டியாவில் வீடு கட்டித் தன் தொகுதி மக்களுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லி வீடு கட்டிக் கொண்டும் அங்கு வசிக்காமல் சுமலதா உள்ளார். இதனால் சுமலதாவின் வாக்குறுதிகள் வெறும் அறிக்கைகளில் மட்டும்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள‌ விவகாரத்தில் எம்பி சுமலதா அம்பரீஷ் (MP Sumalatha Ambareesh) மண்டியா பொதுமக்களால் குறி வைக்கப்பட்டுள்ளார். தற்போது மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மண்டியா மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான்கைந்து நாட்களாக பெய்து வரும் மழையால் மண்டியாவின் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. இத்தனை குழப்பங்களும் மண்டியாவில் நடைபெற்ற நிலையிலும் சுமலதா அம்பரீஷ் மரியாதை நிமித்தமாகக் கூட தனது தொகுதிக்கு வரவில்லை. சேதமடைந்த இடங்கள் குறித்து முகநூலில் பதிவிட்டு அமைதியாக இருந்தார் சுமலதா.

மண்டியா மாவட்டத்தில் மழையால் பலத்த சேதம் (Heavy rain damage) ஏற்பட்டாலும் அதிகாரிகளிடம், வீட்டில் அமர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கச் சொன்ன சுமலதாவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த தேர்தலிலும் வீட்டில் அமர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சுமலதா தற்போது விழித்துக் கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் (social media) தனக்கெதிரான அதிருப்தியை கருத்தில் கொண்டு இன்று மாலை 3 மணிக்கு மாண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சுமலதா ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட‌ சேதம், மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சுமல்தா ஆலோசனை நடத்தி வருகிறார்.