Bangalore Metro trains : சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மெட்ரோ ரயிலில் 6 லட்சத்திற்கு அதிகமானோர் பயணம்

பெங்களூரு : More than 6 lakh people traveled in Bangalore Metro trains : சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மெட்ரோ ரயிலில் 6 லட்சத்திற்கு அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோ ரயில் தொடங்கியதிலிருந்து பயணம் செய்தவர்களில் எண்ணிக்கை அதிகமென்பது குறிப்பிடத் தக்கதாகும்.

சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் நடைபெறும் மலர்க்கண்காட்சிக்கு (Flower Show) பெங்களூரின் மற்ற பகுதிகளிலிருந்து லால்பாக்கிற்கு வருபவர்களுக்கு குறந்தபட்சம் டிக்கெட் கட்டணம் ரூ. 30 என மெட்ரோ ரயில் கழகம் நிர்ணயித்திருந்தது. இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் சுதந்திர தினத்தன்று பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை துல்லியமாக கூறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுதந்திர தினத்தன்று மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் (On behalf of the Congress Party) பெங்களூரு சங்கொல்லி ராயண்ணா சதுக்கத்திலிருந்து பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானம் வரை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வரும் வெளி மாவட்டத்தினர் மட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்தவர்களும் முடிந்தவரை மெட்ரோ ரயிலில் பயணிக்குமாறும், அப்படி பயணித்தால், பெங்களூரு மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தும்கூரு சாலை வழியாக (Via Tumkur road) பெங்களூருக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வாகனங்கள் சர்வதேச எக்சிபிஷன் சென்டரில் நிறுத்திவிட்டு, நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெஜெஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு பயணம் செய்தனர்.

மைசூரு சாலை வழியாக (Via Mysore Road) பெங்களூரு வந்த காங்கிரஸ் கட்சியினர் கெங்கேரி அருகே உள்ள உலக‌ ஒக்கலிகர மகா சபை மடத்தின் அருகே உள்ள‌ மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெஜெஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு பயணம் செய்தனர்.

கனகபுரா சாலை வழியாக (Via Kanakapura Road) பெங்களூரு வந்த அக்கட்சியினர் கனகபுரம் சாலை நைஸ் ஜக்ஷன் அருகே வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கோன‌னகுண்டே மெட்ரோ நிலையத்திலிருந்து மெஜெஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வந்தனர்.

கே.ஆர்.புரம் வழியாக (Via KR Puram) பெங்களூரு வந்த அக்கட்சியினர், பைப்பனஹள்ளி மெட்ரோ நிலையத்திலிருந்து மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வந்தனர்.

எலஹங்கா வழியாக (Via Yelahanka) பெங்களூரு வந்தவர்கள் யஸ்வந்தபுரத்தில் உள்ள சாண்டல் சோப் பேக்டரி மெட்ரோ நிலையத்திலிருந்து மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வந்தனர்.

இவ்வாறு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வந்தவர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் கலந்து கொண்டு விட்டு, நடைபயணம் முடிந்த பிறகு பவசனகுடி நேஷனல் கல்லூரியின் (Bhavasanagudi National College) மைதானத்தின் அருகே உள்ள மெட்ரோ நிலையத்திலிருந்து தாங்கள் வந்த மெட்ரோ நிலையத்திற்கு திரும்ப செல்ல இலவச மெட்ரோ ரயில் பாஸிக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

இதன் காரணமாகவும், லால்பாக் மலர்க் கண்காட்சியையொட்டியும் பெங்களூரு மெட்ரோ ரயிலில் சுதந்திர தினத்தன்று 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். பெங்களூரு மெட்ரோ ரயில் தொடங்கியதிலிருந்து இதுவரை அதிகபட்சமாக 3 சனிக்கிழமைகளில் மட்டுமே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளது. தற்போது ஒரே நாளில் 6 லட்சத்திற்கு அதிகமானோர் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து சாதனை படைந்துள்ளது முதல் முறையாகும் (First time).