Corona Vaccination Camp : தமிழகத்தில் ஆக. 21 இல் மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: Grand Special Corona Vaccination Camp on August 21 in Tamil Nadu : தமிழகத்தில் ஆக. 21-ஆம் தேதி மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. முகாமில் சுமார் 1.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் 2021-ஆம் ஆண்டு ஜன. 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 12 வயது மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது (Corona vaccine is administered).

2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி விரைவாக செலுத்துவதற்காக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் ஆக. 21 ஆம் தேதி 34 வது மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில் முதல் தவணை, இரண்டாவது தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.5 கோடி பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது (The target has been set to vaccinate more than 1.5 crore people).

தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் இன்னும் கரோனா தொற்று பரவுவதை சிறிதளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றை முழுமையாக தடுக்க முடியவில்லை. கரோனா தொற்று தொடர்ந்து பல்வேறு வழிகளிலும், உருமாறியும் பரவி வருகிறது (Corona virus continues to spread in different ways and mutates). இந்த நிலையில் குரங்கு அம்மை பாதிப்பும் இந்தியாவில் கேரளா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனாவையும், குரங்கு அம்மையை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது. கரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மைக்குரிய தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளதா என்ற முழுமையான விவரம் தெரியவில்லை. பூஸ்டர் உள்ளிட்ட தடுப்பூசிகளை உடலில் செலுத்திக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கரோனா உள்ளிட்டவைகளிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.