Ganesh festivel at Eidgah Maidan : சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் திருவிழா: எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் எதிர்ப்பு

Ganesh festivel at Eidgah Maidan

பெங்களூரு: MLA Jameer Ahmed Khan opposed holding Ganesh festivel at Eidgah Maidan : சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் திருவிழா நடத்துவத‌ற்கு அத்தொகுதி எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இந்து அமைப்பினர் ஆவேசமடைந்துள்ளனர்.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து திருவிழா கொண்டாட இந்து அமைப்புகள் முடிவெடுத்துள்ளனர். இதனால் அங்குள்ள‌ சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாமராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இங்கு திருவிழாவை நடத்த இந்து அமைப்புகள் தயாராகி வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து, மதத்தை குறிக்கும் ஈத்கா சுவர் அங்கு தேவையில்லை. இதனை பெங்களூரு மாநகராட்சி மற்றும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உள்ளூர் குடிமைப் பொருள் சங்கம் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுமட்டுமின்றி நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சுவரை இடிக்கவும் அரசுக்கு காலக்கெடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவிழாவை நடத்த (Ganesh festivel at Eidgah Maidan) இந்து அமைப்புகள் தயாராகி வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் சாமராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தின் சர்ச்சை முடிவுக்கு வரும் அறிகுறியே தெரியவில்லை.

பெங்களூரு சாமராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தின் உரிமை தொடர்பான சர்ச்சை முற்றிய நிலையில், மற்றொரு தகராறு வெடித்துள்ளது. ஈத்கா மைதானம் வருவாய் துறைக்கு சொந்தமானது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளும், இந்து முன்னணியினரும், விநாயகர் சதுர்த்தியை (Ganesha Chaturthi) சிறப்பாக கொண்டாடுவோம் என வலியுறுத்தி வரும் நிலையில், ஒரு சில‌ முஸ்லிம் தலைவர்களும், எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கானும், விநாயகர் விழாவை கொண்டாட விடமாட்டோம் என, முழக்கமிட்டு வருகின்றனர். இதனிடையே, ஈத்கா மைதானத்தில் உள்ள சுவரை இடிக்கக்கோரி அரசுக்கு இந்து அமைப்புகள் கால அவகாசம் வழங்கி உள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய சாமராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தின் உரிமை வருவாய்த்துறைக்கு (Revenue department) சொந்தமானது என பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்புடன் சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு பதிலாக, அது வேறு வடிவத்தை எடுத்தது. ஈத்கா மைதானம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. பரம்பரை பரம்பரையாக தொழுகைக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த மைதானத்தில் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்கு விடமாட்டோம் என எம்எல்ஏ ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்து ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈத்கா மைதானம் வருவாய் துறைக்கு சொந்தமானது. முஸ்லிம் சமுதாயத்தினர் பண்டிகை கொண்டாடி தொழுகை செய்ய வாய்ப்பு இருந்தால், நாங்களும் அங்கு விநாயகர் சதுர்த்தியை திருவிழாவாக‌ கொண்டாடுவோம் என்றனர். விநாயகர் ச‌துர்த்தியையொட்டி இங்கு திருவிழாவைக் கொண்டாடுவோம். இதனை எதிர்க்க ஜமீர் அகமது கான் யார்? முடிந்தால் விநாயகர் ச‌துர்த்தி திருவிழாவை தடுத்து பார்க்கட்டும் என்று ஸ்ரீராம் சேனாவை சேர்ந்த பிரமோத் முத்தாலிக் (Pramod Muthalik) சவால் விடுத்துள்ளார்.

தற்போது சாமராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த இந்து அமைப்புகள் (Hindu organizations) தயாராகி வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் தற்போதைக்கு சாமராஜ்பேட்டை ஈத்கா மைதான சர்ச்சை முடிவுக்கு வரும் அறிகுறியே தென்பட‌வில்லை.

Also Read : JDU, BJP alliance break : ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி முறிவு: நிதிஷ்குமார் அறிவிப்பு

Aslo Read : Mitchell Starc and Alyssa Healy pair : கிரிக்கெட் உலகில் ஒரு அபூர்வ கணவன்-மனைவி ஜோடி: 8 உலகக் கோப்பைகள், ஒரு காமன்வெல்த் தங்கம் வென்ற பலே ஜோடி