Nitish Kumar has resigned: பதவியை ராஜிநாமா செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

அண்மையில் நிதிஷ்குமாரை சமாதானப்படுத்த மத்திய‌ உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார்  வந்திருந்தார். பாஜக‌வின் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

பாட்னா : Bihar Chief Minister Nitish Kumar has resigned from the post : பாஜகவுடன் கூட்டணி வைத்து பீகாரில் ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU), பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த‌து. அண்மைக் காலமாக இரு கட்சிகள் இடையே விரிசல் அதிகரித்து வந்தது. குறிப்பாக, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் (Chief Minister Nitish Kumar), மத்திய அரசின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய குடியரசு தலைவர் முர்மு பதவியேற்பு விழா, முதல்வர்கள் மாநாடு என அனைத்தையும் புறக்கணித்தார். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தையும் நிதிஷ் புறக்கணித்தார். அண்மையில் நிதிஷ்குமாரை சமாதானப்படுத்த மத்திய‌ உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார்  வந்திருந்தார். பாஜக‌வின் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதுமட்டுமின்றி, மத்திய‌ அமைச்சரவையில் தனது கட்சி சார்பில் இருந்த ஒரே ஒரு அமைச்சராக இருந்த‌ ஆர்சிபி சிங்கின் பதவியையும் நிதிஷ் குமாரே காலி செய்தார். ஆர்சிபி சிங்கின் (RCB Singh) மாநிலங்களவை பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் சீட் தராமல் ஒதுக்கினார்.

இதனால், எம்பி பதவியை இழந்ததோடு, அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு நிதிஷ் குமார் கொண்டு வந்தார். அதோடு, மத்திய‌ அமைச்சரவையில் இனி ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறாது எனவும் அக்கட்சி தரப்பில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நிதிஷ்குமார், பாஜக‌ உடனான உறவை துண்டிக்க தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கெல்லாம் காரணம், ஆர்சிபி சிங்கை வைத்து மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல ஆபரேஷன் தாமரை (Operation Lotus) திட்டத்தை அரங்கேற்ற பாஜக‌ மறைமுகமாக திட்டமிட்டதாக‌ என கூறப்படுகிறது. ஆர்சிபி சிங் மீது சொத்து குவிப்பு குற்றச்சாட்டை சுமத்திய ஐக்கிய ஜனதா தளம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது அவர், ‘ஐக்கிய ஜனதா தளம் மூழ்கும் கப்பல்’ என விமர்சித்தார். அவரை வைத்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக‌ திட்டம் (BJP plan) வகுப்பதாக செய்திகள் கசிந்தன. இதனால் கூட்டணியை முறிப்பதற்கான முக்கிய முடிவை நிதிஷ்குமார் எடுத்த‌தாக கூறப்படுகிறது.

இதற்காக கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெற்ற‌து. இதற்காக அக்கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் (MP, MLAs) அழைப்பின் பேரில் பாட்னாவுக்கு விரைந்தனர். கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தியாகி ஏற்கெனவே அறிவித்திருந்தார். பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி விவகாரம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி (Rashtriya Janata Dal Party) துணைத் தலைவர் சிவானந்த் திவாரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேசிய ஜனநாயாக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி வந்தால், நிதிஷூடன் இணைய நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜக‌வை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே முதல்வர் நிதிஷ்குமாரும் இப்போராட்டத்தில் இணைய சம்மதித்தால், நாங்கள் இணைந்து செயல்படுவோம்’’ என்றார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (Marxist Communist Party) நிதிஷ்குமாருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவேதான் நிதிஷ்குமார் பாஜக‌ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்க உள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் விலகியுள்ளது தேசிய அளவில் பாஜகவிடன் இனி கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் யோசிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்கால அரசியலுக்கு பாஜகவிற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் எனக் கருத்தப்படுகிறது. பீகாரில் தாமரை திட்டத்தை செயல்படுத்தப்போய், பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்து கடிதம் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த நிதிஷ்குமா லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வியின் இல்லத்திற்கு சென்றார்.