Minister Meets with Industry Investors: செக் குடியரசு நாட்டில் தொழில் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் சந்திப்பு

சென்னை: Minister Meets with Industry Investors. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் நாட்டினை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் பங்கு கொள்ள 3.10.2022 அன்று இரவு செக் குடியரசு நாட்டிற்கு சென்றடைந்தார்.

குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 4.10.2022 அன்று செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப் பயண விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

அதனை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்களும் MSME குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும் தொழிற் சாலையினையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின் போது அமைச்சர் அந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அரங்கினை பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் .வி.அருண் ராய், நிதித்துறை அரசு துணை செயலானார் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சான் மற்றும் தமிழக MSME தொழில் துறை குழுவினர், செக் குடியரசு உயர் அலுவலர்கள், செக் குடியரசின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்துக்கொண்டனர்.