Minister Halappa Achar :ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய சுரங்கத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் பங்கேற்பு

அடுத்த 25 ஆண்டுகளில் சுரங்கங்களின் மூலம் ஏற்படும் உற்பத்தியின் அளவு உலக அளவிலான தேவையை விட அதிகமாக இருக்கும்.

பெங்களூரு: participates in the National Mining Ministers Conference in Hyderabad :நாட்டின் சுரங்கத் துறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள “தேசிய சுரங்க அமைச்சர்கள் மாநாட்டில்” கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பங்கேற்கிறார்.

நாட்டின் சுரங்கத் துறையின் உண்மையான சவால்கள் (Real challenges) மற்றும் சாத்தியக்கூறுகளை உணர இந்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனிமங்களுக்கான உலகளாவிய தேவை அடுத்த 25 ஆண்டுகளில் உற்பத்தியை விட அதிகமாக இருக்கும். இத்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் தேசிய சுரங்க அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சுரங்கம் தொடர்பான அமர்வுகள் நடத்தப்பட்டு, மாநில சுரங்கத் துறை தொடர்பான தகவல்களை அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பகிர்ந்து கொள்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் சுரங்கத் துறை மற்றும் மாநிலத்தின் சுரங்கத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து அமைச்சர் செயல்விளக்கம் அளிக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சருடன் மாநில சுரங்கத் துறை இயக்குநர் டி.எஸ்.ரமேஷ் (State Director of Mines Ramesh) பங்கேற்கிறார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி (Minister Praglad Joshi), மத்திய சுரங்கம், நிலக்கரி மற்றும் ரயில்வேத்துறை இணையமைச்சர் ராவ் சாகிப் பட்டேல் தன்வே, மத்திய அமைச்சகங்களின் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். மேலும், இந்த மாநாட்டின் மூலம் மத்திய சுரங்கத்துறை மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதற்கான முன் முயற்சியை மேற்கொள்ளும்.

இந்த மாநாட்டில் சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசுகளால் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை (NMET) நிதியை திறம்பட பயன்படுத்துதல் போன்றவைகள் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் (Karnataka, Odisha, Madhya Pradesh, Chhattisgarh, Maharashtra, Gujarat) போன்ற மாநிலங்களின் இத்துறை சார்ந்த செயல்பாடுகளும், மாநில அரசுகளின் ஏல நடவடிக்கைகள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்களுடனான (என்பிஇஏஎஸ்) தொடர்பு குறித்தும் விவாதிக்கப்படும்

சுரங்க அமைச்சகம் (Ministry of Mines) மற்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சுரங்கத் துறையில் தற்போதைய முயற்சிகள் மற்றும் மாநில அரசுகளால் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை நிதியை திறம்பட பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.