Maharashtra on high alert : மகாராஷ்டிராவில் பயங்கரவாத நடவடிக்கையால் அச்சம்: ஆயுதங்கள் நிரப்பப்பட்ட படகு கண்டுபிடிப்பு

Terror boat found : முதற்கட்ட தகவலின்படி, ராய்கரில் உள்ள ஹரிஹரேஷ்வர் மற்றும் ஸ்ரீவர்தனில் உள்ள பரர்கோல் ஆகிய இடங்களில் ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய சில படகுகள் மீட்க‌ப்பட்டன.

மகாராஷ்டிரா : Maharashtra on high alert : ராய்காட் மாவட்டத்திற்கு கடத்தப்பட்ட ஏகே 47 ரக துப்பாக்கிகள் ஏற்றிச் செல்லப்பட்ட படகை பாதுகாப்புப் படையினர் இன்று பறிமுதல் செய்ததையடுத்து, மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு ராய்காட் மாவட்டத்தில் உள்ள அனைத்து கப்பல் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் நிரப்பபட்ட‌ படகு ராய்காட்டில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரைக்கு (Harihareshwar Beach) அருகில் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ராய்கர் காவல் கண்காணிப்பாளர் அசோக் துதே மற்றும் பிற மூத்த அதிகாரிகள் படகை சோதனை செய்தனர். படகில் 3 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான மேல் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, ராய்கரில் உள்ள ஹரிஹரேஷ்வர் மற்றும் ஸ்ரீவர்தனில் உள்ள பரர்கோல் ஆகிய இடங்களில் ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய சில படகுகள் மீட்க‌ப்பட்டன. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎஸ் அல்லது மாநில ஏஜென்சியின் சிறப்புக் குழுவை உடனடியாக நியமிக்குமாறு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை நான் வலியுறுத்தியுள்ளேன் என்று எம்எல்ஏக்கள் அதிரி தட்கரே மற்றும் ஸ்ரீவர்தன் (MLAs Athiri Thadgare and Srivardhan) ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இந்த படகில் இருந்த பணியாளர்கள் இந்த ஆண்டு ஜூன் மாதம் கடற்கரை அருகே மீட்கப்பட்டனர். ஆனால் தற்போது அந்தப்படகில் துப்பாக்கிகள் சிக்கியதால் ராய்கர் மாவட்டம் (Raigarh District) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி நாட்டில் அமைதியை குலைக்க பயங்கவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே மத்திய உள்துறை மாநிலங்களை எச்சரித்திருந்தது (The Union Home Ministry had warned the states). இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் ஆயுதங்களுடன் படகு மீட்கப்பட்டுள்ளது. இந்த படகு எங்கிருந்த வந்தது. யார் கொண்டுவந்தது உள்ளிட்ட விவரங்கள் தெரிந்த பின்னர்தான் படகின் பின்னணி குறித்து தெரிய வரும்.