how much Viruman movie collected in 5 days? 5 நாட்களில் விருமன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: how much the movie Viruman collected in 5 days? விருமன் படத்தின் உலகம் முழுவதும் 5 நாட்களில் வசூலை குவித்துள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ‘விருமன்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முத்தையா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படம் வெற்றிநடைபோட படக்குழுவும் வெற்றிவிழாவைக் கொண்டாடியுள்ளனர். வசூலில் தெறிக்க விடும் விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாள் முடிவில் ரூ. 44 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் எந்த ஒரு பெரிய நடிகரின் பட ரிலீஸ் எதுவும் இல்லை என்பதால் இப்படத்திற்கான வசூலிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்கின்றனர்.

இந்நிலையில், விருமன் படத்தை தயாரித்த நடிகர் சூர்யா, படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, யாரும் தனியாக இருந்தால் ஜெயிக்க முடியாது. குடும்பங்களின் தியாகம், விட்டுக்கொடுக்கும் தன்மை, அவர்கள் சுமக்கும் அத்தனை பாரமும்தான் செய்யக்கூடிய தொழிலைத் தொடர்ந்து செய்ய காரணமாக அமைகிறது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எங்களுக்கு பின் பெரிய பலம் உள்ளது.

எங்களை கை தூக்கி விடவும், எங்களை மேலே தூக்கி விடவும் காரணமாக இருப்பது எங்கள் குடும்பத்து பெண்கள் தான். என் அம்மா, மனைவி, என் மகள் ஆகியோர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று தெரியும். ஒரு ஆண் வெற்றி பெறுவது சுலபம். அதுவே ஒரு பெண் ஜெயிக்க 10 மடங்கு சிரமப்பட வேண்டும். பெண்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். தன் வீட்டிலுள்ள மகனை முன் நிறுத்திவிட்டு அவர்கள் பின்தங்குகிறார்கள். இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.