Madurai-Sengottai special train cancelled: மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து

நெல்லை: Madurai-Sengottai special train cancelled. மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில் பாதைகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மதுரை சிறப்பு ரயில் (06664) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை வரும் 18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில் (16322) மற்றும் சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) வரும் 22, 25, 26 ஆகிய நாட்களில் முறையே 90 மற்றும் 70 நிமிடங்கள் காலதாமதமாக நெல்லை வந்து சேரும்.

வரும் 22, 25, 26ம் தேதிகளில் சென்னை – குருவாயூர் ரயில் தாமதமாக வருவதால், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை இருக்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.