Supreme Court : தொழிலாளர் ஓய்வூதியச் சட்டத் திருத்தம் செல்லும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : Labour Pension Amendment Act Goes, Supreme Court :தொழிலாளர் ஓய்வூதியச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் ஓய்வூதிய சட்டத்தில் (Labour Pension Amendment Act) கடந்த 2014 ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஓய்வூதிய பங்களிப்புக்கான அதிகபட்ச ஊதியம் மாதம் ரூ.6,500 இல் இருந்து ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டது. மாதம் ரூ. 15,000 க்கு மேல் ஊதியம் பெறுவோர் 1.16 சதவீதம் கூடுதல் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என விதிகளில் திருத்தம் மேற்கொள்ள‌ப்பட்டது. மேலும், ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சஊதியம் மாதம் ரூ.15,000 ஆக இருக்க வேண்டுமெனவும் விதிகள் திருத்தப்பட்டன.

ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக கேரளம், ராஜஸ்தான், தில்லி (Kerala, Rajasthan, Delhi) மாநில உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயர்நீதிமன்றங்கள், புதிய திருத்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டன. அந்த உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசும், தொழிலாளர் ஓய்வூதிய நிதி அமைப்பும் (இபிஎஃப்ஓ) உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த மனுக்களை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஷர் துலியா ஆகியோரைக்கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், தொழிலாளர் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என அறிவித்தனர்.

எனினும், ரூ. 15,000 க்கு அதிகமாக மாத ஊதியம் பெறுவோர் மட்டுமே ஓய்வூதிய நிதியில் இணைய முடியும் (Only monthly wage earners can join the pension fund)என்ற விதியை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதிய திருத்தங்கள் தொடர்பாக நிலவிய பல்வேறு குழப்பங்கள் காரணமாக ஓய்வூதிய நிதியில் இணையாத தொழிலாளர்களுக்கு திட்டத்தில் இணைய 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாதம் ரூ.15,000 க்கு அதிகமாக ஊதியம் பெறுவோர் கூடுதலாக 1.16 சதவீதம் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற திருத்தத்தையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். இபிஎஃப்ஓ அமைப்பு கூடுதல் நிதியைத் திரட்டும் நோக்கில், இந்த விதி ரத்தானது 6 மாதங்களுக்கு செல்லாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 6 மாதங்களுக்குத் தொழிலாளர்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.