Heavy rain in 15 districts today 15 மாவட்டங்களில் இன்று பலத்த மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: Heavy rain in 15 districts today, Chennai Meteorological Center information : தமிழகத்தில் சனிக்கிழமை 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Center )வெளியிட்ட செய்திக் குறிப்பு : தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின் னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநக , சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் (Puducherry and Karaikal) பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் (Moderate rain with thunder and lightning is likely for 48 hours) என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ. 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளது. இது 10,11 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (Department of Revenue and Disaster Management) தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் மிக அதிகமாக 55.90 மிம் மழை பதிவாகியுள்ளது . வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்டு, இதுவரை பல்வேறு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளன‌ர். சென்னை மாநகராட்சியில் 191 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளுக்கு 1070 என்ற இலவச எண்ணை அணுகலாம்.