Chief Minister M.K. Stalin: தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்: முதல்வ‌ர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை : Let’s suppress by law the dirty politics involved in low quality activities: தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என்று தமிழக‌ முதல்வ‌ர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இது குறித்து முதல்வ‌ர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் தேசபக்திக்கு ‘ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது. ராணுவ வீரருக்கு வீர வணக்கம் செலுத்தும் அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில் மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பாஜகவின் தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அது குறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு தங்களின் தரம் என்ன என்பதையும் தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும், வெளிப்படுத்தியிருக்கிறார்கள் . தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.

வீரமரணம் எய்திய இராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று . குடும்பத்தினரைச் சந்தித்து வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும் . நாட்டின் விடுதலையின் 75 வது ஆண்டினை (75th year of Independence of the country) வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களோ ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால் போகிற வழியில் இராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் லாபம் தேடலாம் என்ற கணக்குடன் சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்று, தேசியக் கொடியை அவமதித்துள்ளனர். இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே அமைச்சரை நேரில் சந்தித்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், இனி இவர்களின் சங்காத்தயே வேண்டாம் எனத் தலை முழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பி.டி.ராஜனின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் (Belongs to PT Rajan’s family), பண்பாளர் பி.டி ஆர். பழனிவேல்ராஜனின் அவர்களின் புதல்வருமான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத் தெரிவித்து , மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தியிருப்பதுடன் தனது காரில் வீசப்பட்ட ஓற்றைச் செருப்பை அதற்குரிய ‘ சிந்தரெல்லா ‘ வாங்கிச் செல்லலாம் . என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு , தனக்கு எதிராகத் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார் . தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கழகமும் செயல்பட்டு வருகிறது.

இதை சாதகமாக நினைத்துக்கொண்டு , விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களை தப்பவிட மாட்டோம் (We will not let them escape the clutches of the law) என்ற உறுதி மொழியையும், உத்தரவாதத்தையும் வழங்குகிறேன். இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும் , விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளை போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஓட்டிக்கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.