Edappadi Palaniswami meets Governor RN Ravi : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்

சென்னை: Leader of Opposition Edappadi Palaniswami meets Governor RN Ravi ; தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (நவம்பர் 23) சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆளுந‌ர் மாளிகையில் நாளை மதியம் 12.45 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை (Governor RN Ravi) சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று, தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ராஜ்பவனில் சந்திக்கவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சியான திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவார் என தெரிகிறது.

ஏற்கெனவே தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வரும் (Parties including DMK are demanding that the governor be replaced) நிலையில் ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.