High Court : அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: High Court ordered the private software company to provide uninterrupted cable service : அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி (Government Cable TV) சேவையில் இடையூறு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரு நாள்களாக தடை ஏற்பட்டுள்ளது.


இதனால் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். அதே வேளையில் கேபிள் டிவி உரிமையாளா்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனா் (Insisting to fix the cable TV technical problem).

இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியாா் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகாா் எழுந்தது. மாநிலம் முழுவதும் 22 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அந்த நிறுவனம் முடக்கியிருப்பதாகவும்(The company has disabled 22 lakh set-up boxes) தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து அரசு கேபிள் டிவி சேவையில் தனியாா் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக எழுந்த புகாா் தொடா்பாக, அந்த நிறுவனத்தின் நிா்வாகி ராஜன் கைது செய்யப்பட்டார் (Rajan, the manager of the company, was arrested). சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.