Edappadi Palaniswamy : தமிழகத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது :எடப்பாடி பழனிசாமி

சென்னை : Law and order has broken down in Tamil Nadu: Edappadi Palaniswamy : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் கிண்டியில் உள்ள சட்டம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். அப்போது ஆளுநரிடம் தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த மனுவை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் (Governor R.N.Ravi) அளித்தார் .

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன . போதைப் பொருள் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர் (Students are getting addicted to drugs). இதனை தமிழக போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பில் இல்லை. இது குறித்து அரசு உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காலாவதியான மருந்துகள் விநியோகம் குறித்து உயர்நீதிமன்றமே விமர்சனம் செய்துள்ளது. கோவை குண்டு வெடிப்புசம்பவம் குறித்து மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்தும் கூட தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை (No action was taken regarding the blast). தமிழ் நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுந‌ரிடம் எடுத்துரைத்துள்ளேன். இது தொடர்பாக விரிவான ஒரு அறிக்கையை ஆளுந‌ரிடம் கொடுத்திருக்கிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மு.க. ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். நம்ம ஊரு சூப்பரு விளம்பர பேனரில் முறைகேடு நடந்துள்ளது. ரூ. 350 செலவான ஒரு பேனருக்கு ரூ. 7,906 என்று கணக்கு காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன (Bars are open 24 hours a day in Tamil Nadu). அரசு இது தொடர்பாக உரிய‌ நடவடிக்கைகளை எடுக்க‌ வேண்டும் என்றார்.