Actor Vijay fined Rs.500: நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிப்பு

சென்னை: Actor Vijay has been fined Rs 500 for having a black sticker on his car window. நடிகர் விஜய் கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் அவர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். நடிகர் விஜயை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இந்த நிலையில் பனையூருக்கு சென்றபோது நடிகர் விஜய்யின் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக சமூக வலைதளத்தில் ஒருவர் சென்னை போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் விஐபிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு இதுபோன்ற விலக்கு ஏதும் அளிக்கப்பட்டிருக்கிறதா எனவும், இதற்கு அபராதம் விதிக்க முடியாதா? என்ற கேள்வியுடன் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த முடிவை தமிழ் திரையுலகினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு எந்த ஒரு சிக்கலுமின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் ரிலீசாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார்.