KMF Milk Price Hike in Karnataka : கர்நாடகத்தில் விரைவில் பால் விலை உயர்வு : கர்நாடக பால் கூட்டமைப்பு

நந்தினி பாலின் பாக்கெட் விலையை உயர்த்த 14 மாவட்ட பால் சங்கங்கள் வலியுறுத்தி வருவதாக கர்நாடக பால் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநர் சதீஷ் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: (KMF Milk Price Hike in Karnataka) எரிபொருள் விலை மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக தத்தளிக்கும் நுகர்வோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது, விரைவில் நந்தினி பால் விலையும் உயரும். காபி, டீ பிரியர்களுக்கு பால் விலை விநாயக சதுர்த்தியையொட்டி இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக‌ உள்ளது. பல மாநிலங்களில் பால் விலையை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளன. என்றாலும் விலை உயர்த்துவதற்கு அரசு தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தற்போது பால் விலை உயர்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநர் சதீஷ் (Karnataka Milk Federation Managing Director Satish ) அவர்கள் பால் விலை உயர்வு குறித்து தகவல் அளித்து கூறியதாவது: நந்தினி பாலின் பாக்கெட் விலையை உயர்த்த 14 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மாநிலத்தின் 14 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தொடர்ந்து பால் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. ஒருவேளை பால் விலையை உயர்த்தினால், அதில் கிடைக்கும் கூடுதல் வருவாயை விவசாயிகளுக்கும் வழங்கப்படும். பால் பாக்கெட் விலை உயர்வு தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆலோசித்து, சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை (Chief Minister Basavaraj bommai) தெரிவித்ததாக‌ கூட்டமைப்பின் மேலாண் இயக்குநர் சதீஷ் கூறினார். தற்போது பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 37 ஆக உள்ளது. அரசு ஒப்புக்கொண்டால் ரூ. 40 ஆக உயர்ந்தப்படும். இதனால், சிரமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தப்படுவதிலிருந்து கிடைக்கும் வருவாயை வழங்கப்படும். எனவே நுகர்வோர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே எண்ணெய் விலை உயர்வு, மளிகை பொருட்களின் விலை உயர்வு மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பால் விலை உயர்வு மேலும் அவர்களுக்கு சுமையைக் கூட்ட உள்ளது. கடந்த காலங்களில் பால் விலை உயர்வுக்கு மக்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கர்நாடக பால் உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இந்த விலை உயர்வை, அரசு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் (Assembly elections are approaching) அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.