Karnataka heavy rainfall for next 5 days: கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை

மங்களூரு : Issued alert, school holiday :கர்நாடக மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தாவணகரே, சித்ரதுர்கா, தும்கூர், சிக்கபள்ளாப்பூர், ஷிமோகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் (Thavanagare, Chitradurga, Tumkur, Chikkaballapur, Shimoga, Chikkamagaluru, Kodagu, Hassan) ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஷிமோகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது (Orange alert has been announced). அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடலோரப் பகுதிகள், தெற்கு உள்நாடு மற்றும் வடக்கு உள்பகுதியில் மழை பெய்யக்கூடும்.

மங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட உல்லாலா, முல்கி, மூடுபிதிரே மற்றும் பந்த்வாலா உள்ளிட்ட‌ தாலுகாக்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் (Heavy rain with thunder and lightning), அப்பகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று (சனிக்கிழமை )விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மங்களூர் உட்கோட்டத்தில் (மங்களூர் மாநகராட்சி, முல்கி, மூடுபிதிரே, உல்லாலா மற்றும் பந்த்வாலா தாலுகாக்கள்) அனைத்து அங்கன்வாடி மையங்கள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (Today is a holiday for primary and secondary schools) அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தூர் சப்-டிவிஷனின் பிற இடங்களில், தாசில்தார் மற்றும் பிஇஓக்கள் உள்ளூர் நிலவரத்தை மதிப்பிட்டு உள்ளூரில் முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, வியாழன் காலை 8:30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் (In 24 hours) 20.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி வரையிலான ஒன்பது மணி நேரத்தில் 2.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வானிலைத் துறையானது, ‘தூரல்’ மற்றும் 2.4 மி.மீ, இடையே பெய்யும் மழையை, ‘மிக லேசான மழை’ என்றும், 2.5 மி.மீ முதல் 15.5 மி.மீ வரை, ‘லேசான மழை’ என்றும், 15.6 மி.மீ முதல் 64.4 மி.மீ வரை, ‘மிதமான’ மழை என்றும், ஒரே நாளில் 64.5 மிமீக்கு மேல் இருக்கும் போது ‘கனமான மழை’ என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் பெய்த கனமழையால் தென் கன்னடம், வட கன்னடம், குடகு (North Kannada, Kodagu) சிக்கமங்களூரு, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகளும், நெடுஞ்சாலைகளில் மலைமண் சரிந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை வெள்ளத்தில், கார், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து, மழைகளின் போது மாணவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கனமழை பெய்யும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி இருந்தனர். வட மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு பலர் பலியாகி உள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே கனமழையின் போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.