Kallakurichi Collector, SP Transfer: கள்ளக்குறிச்சி ஆட்சியர், எஸ்.பி., இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

சென்னை: Kallakurichi Collector, SP Transfer: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நீதி விசாரணை கோரி இளைஞர்கள் திரண்டு (Kallakurichi Riots) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் (Police Vehicles) அடித்து நொறுக்கப்பட்டன. இது மிகப் பெரிய கலவரமாக மாறி, பள்ளி வளாகத்தில் உள்ள பேருந்துகளை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

இதனையடுத்து, உடனடியாக தடியடி நடத்தி கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு (DGP Sylendra Babu) மற்றும் உள்துறை செயலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சின்ன சேலம், நைனார்பாளையம், உளுந்தூர் பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மொத்தமாக 302 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 61 பேர் கடலூர் சிறையிலும், 219 பேர் திருச்சி சிறையிலும் 21 பேர் செஞ்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் (Kallakurichi Collector) பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (Kallakurichi Police SP)செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் (Chief Secretary) வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.