Kaanum Pongal Watch towers:காணும் பொங்கல் கூட்டத்தை கண்காணிக்க மெரினாவில் 10 கண்காணிப்பு கோபுரங்கள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (Kaanum Pongal Watch towers) தமிழர்கள் அனைவரும் மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதன்படி தை முதல்நாள் பொங்கல் பண்டிகையும், அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படும். மூன்றாவது நாளாக காணும் பொங்கலாமக மக்கள் சுற்றுலா தலங்களில் உறவினர்களுடன் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித கொண்டாடங்களுக்கும் பெரிய அளவில் இல்லை. அந்த வகையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தமிழம் முழுவதும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகையின்போது காணும்பொங்கல் கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று இல்லாத நிலையில் தைப்பொங்கலை வரவேற்பதற்காக மக்கள் தயாராகிவிட்டனர். வருகின்ற ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் புதிய ஆடைகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம், கூட்டமாக கடைகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.